எங்களை பற்றி

எதற்காகத் தோன்றியது உழைப்பாளர் முன்னேற்றக் கழகம்

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். நாட்டில் வறுமை நிலை ஒழிய வேண்டும். அரசு வரைந்த வறுமைக் கோட்டிற்குக் கீழே, நொந்த மனதுடன் வாழும் ஏழை, எளிய மக்களை உயர்த்திவிட என்னால் முடிந்ததைச் செய்யவேண்டும் என்பது என் ஆசை.

சாதி, மதம் அற்ற நல்ல தமிழ்ச் சமுதாயம் உருவாக வேண்டும். அதன்மூலம் ஒரு வலிமையான இந்தியா உருவாக நாம் துணை நிற்க வேண்டும் என்பது என் ஆசை.

நல்ல சிந்தனையுள்ள, நோயற்ற,திடகாத்திரமான, வருங்கால நல்ல தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும் என்பது என் ஆசை.

அதற்கு அடிப்படைத் தேவையான நல்ல சுகாதாரமான, ஊட்டச்சத்து நிறைந்த உணவு,சுத்தமான உடை, நல்ல காற்றோட்டமான இருப்பிடம் இவை அனைத்தும் ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழச்சிக்கும் தாராளமாகக் கிடைக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு.

எல்லோருக்கும் தரமான கல்வி, முழுமையான இலவச மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பது என் ஆசை.

என் தமிழ் மக்களுக்கான மேற்கண்ட என் ஆசைகள் அனைத்தும் நிறைவேற என்னால் முடிந்ததைச் செய்யவேண்டும் என்பது என் எண்ணம்.மக்களுக்கான இந்த எனது ஆசைகள் நிறைவேற வேண்டுமெனில், அதற்காக ஒரு இயக்கம் துவங்கி அந்த இயக்கத்தை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்து,அந்த அரசியல் கட்சி மூலம் ஒரு பதவிக்கு வந்து,மக்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்யவேண்டும் எனத் திட்டமிட்டு, புதிய அரசியல் கட்சி ஒன்றைத் துவக்கி, இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தேன்.

இந்தியத் தேர்தல் ஆணையமும் அதற்கு உழைப்பாளர் முன்னற்றக் கழகம் என்ற பெயருக்கு ஒப்புதல் தந்துள்ளது. மக்கள் பணியே மகேசன் பணி என்ற எனது பணியைத் துவங்கியிருக்கும் எனக்கு உங்களின் மேலான ஆதரவை எதிர்பார்க்கும் மக்கள் சேவகன்.